சீனிவாசன் நடராஜன்
சீனிவாசன் நடராஜன் (ஜனவரி, 1972) ஓவியர், நாவலாசிரியர், புகைப்படக் கலைஞர் ராஜமன்னார்குடியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், தமிழ்நாடு அரசின் 2000 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, தேசிய அளவிலான இரண்டு விருதுகள், மாதிய அரசின் விந்து என்று பல விருதுகளை பெற்றவர்.
ஆய்வு மாணவராக இவர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைக்கு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும், இரண்டு விருதுகளைப்
பெற்றிருக்கிறார்.
இந்திய அளவிலும் உலக அளவிலும் 30 ஆண்டுகளாக பல கண்காட்சிகளை நடத்தி வருகிறர்.
சைவ சித்தாந்தம் படித்தவர், நுண்கலைக் பட்டம், மேலாண்மையில் பட்டமும் பெற்றவர். 1991இல் சென்னை விமான நிலையத்தில் இவரின் முதல் தனிநபர் கண்காட்சி நடந்தது, அதே ஆண்டில் தோட்டம் கவிதைகள் என்ற பெயரில் முதல் கவிதைத் தொகுப்பு வெளி தொடர்ந்து தாளடி, விடம்பனம் இரண்டு நாவல்கள், அச்சப்படத் தேவையில்லை,
நம்மோடுதான் போகிறார்கள், புனைவு, கனவு விடியும் ஆகிய கட்டுரைத் தொகுதிகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
கணையாழி இலக்கிய இதழின் இணை ஆசிரியராக பணியாற்றியவர் .
தமிழ்நாடு அரசு 2018 ஆம் துவங்கிய பள்ளிக்கூட மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தின் வடிவமைப்புக்கான கொள்கைக் குறிப்புகளை வடிவமைத்தவர், தலைமை வடிவமைப்பாளராகவும் செயல்பட்டு 60 நாட்களில் 35000 பக்கங்களுக்கு மேல் வடிவமைத்த குழுவின் தலைவராக செயல்பட்டார்.
தமிழ்நாடு அரசு விளையாட்டு பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் செயல்பட்டவர், தமிழ் இலக்கியத்தில் கவிதைகளுக்கான, 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் கூடிய கவிஞர் ஆத்மாநாம் விருதை ஆண்டு தோறும் வழங்கும் ஆத்மாநாம் அறக்கட்டளையின் நிறுவனர்.
Showing all 6 results
-
எழுத்தாளர் சீனிவாசன் நடராஜன் நூல்கள் 10% தள்ளுபடியில்
Original price was: ₹820.00.₹738.00Current price is: ₹738.00. Add to cart -
கனவு விடியும்
₹90.00 Add to cart -
புனைவு
₹108.00 Add to cart -
கலை அல்லது காமம்
₹120.00 Add to cart -
காகிதப்பூ
₹250.00 Add to cart -
தாளடி
Original price was: ₹230.00.₹207.00Current price is: ₹207.00. Add to cart