Description
தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர் சாவி. பேராசிரியர் ‘கல்கி’ அவர்களின் நிழலில் தம்மைச் செம்மைப்டுத்திக் கொண்டவர். ‘கல்கி’ அவர்கள் சொந்தமாக வார இதழ் தொடங்கிய போது 1943 முதல் 1947 வரை அவருடன் பணியாற்றினார். 1967-இல் தினமணி கதிர் இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதியின் குங்குமம் வார இதழ் ஆசிரியராகி அந்த இதழை மிகச் சிறந்த முறையில் வளர்த்தார். தலைவர் காமராஜர் பாசத்தோடு நெருங்கிப் பழகிய மிகச் சில பத்திரிகையாளர்களில் இவரும் ஒருவர். கர்நாடக இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகளின் தீவிர ரசிகர். இவர் எழுதிய நூல்கள் : வாஷிங்டனில் திருமணம், நவகாளியாத்திரை, விசிறி வாழை, வழிப்போக்கன், கேரக்டர், பழைய கணக்கு, இங்கே போயிருக்கிறீர்களா, சிவகாமியின் செல்வன், கோமகனின் காதல், தெப்போ 70, திருக்குறள் கதைகள், வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு, ஆப்பிள் பசி, ஊரார், கனவுப்பாலம், வேதவித்து.
Reviews
There are no reviews yet.