Description
திரு. துரை, தனபாலன் அவர்கள், “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற திருமூலரின் வாக்கை மெய்ப்பிக்கும் வண்ணம். உலகப் பொது மறையாம் திருக்குறளை ஆழ்ந்து, கசடறக் கற்று, அவர் அடைந்த இன்பத்தை இந்நூல் மூலம் நம் முடன் பகிர்ந்துள்ளார். தமிழ் உலகம் திருக்குறளை முற்றிலும் அறிய வேண்டும். கற்க வேண்டும் என்பதற்காக, காமத்துப் பாலின் நயங்களை, அவரது பாங்கில், அழகுத் தமிழில் யாத்துத் தந்துள்ளார். அன்னாரின் முயற்சிக்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், – DR.M. முத்துகிருஷ்ணன் காமத்துப்பால், முப்பாலின் வரிசையில் மூன்றாமிடம் வகித்தாலும், கற்றின்பந் துய்க்குங்கால், “மாங்கனியென நனிசுவை தரும் பால்’ ஆகி முதலிடத்தைப் பெற வல்லதாகும். அப்பாலில் அரும்பாக்கள் நூறெடுத்து, அழகு தமிழ்ச் சொல் தொடுத்து, இந்நூலைப் படிப்போர் அனைவரும் பேரின்பம் பெற விழைந்து, இலக்கிய நயவுரை தீட்டியுள்ளார் இலக்கியத் தேனி துரை.தனபாலன். இவர் ஒவ்வொரு பாவிலும் பொதிந்துள்ள இலக்கிய நயத்தை எடுத்தியம்பும் பாங்கு பெரும் பாராட்டுக்குரியது. – கவிஞர், சொ.நா. எழிலரசு (எ) ராசாமணி
Reviews
There are no reviews yet.