Description
கவிதைத் தொகுப்புகளை அடுத்தடுத்து வழங்கி வந்த தோழர் பெரியசாமி, இப்போது தன் முதல் கட்டுரைத் தொகுப்பைத் தந்திருக்கிறார். நீண்ட காலமாக ஆரவாரமின்றி எழுதி வரும் பெரியசாமியின் பரந்துபட்ட வாசிப்பு அனுபவம், இக்கட்டுரைகளில் பளிச் சென்று வெளிப்பட்டுத் தெரிகிறது.
கவித்துவம், கற்பனை, சமூகப் பார்வை, உணர்வு மயமான அணுகுமுறை, சக படைப்பாளிகளின் எழுத்துகளைத் தயக்கமின்றி உச்சி முகர்ந்து கொண்டாடி மகிழ்ச்சி அடையும் மன விசாலம் எல்லாமும் இக் கட்டுரைகளில் பொங்கிப் பிரவாகம் எடுக்கின்றன.
நுணுக்கமான விமரிசனங்களையும் நட்பார்ந்த உரிமையுடன் முன் வைக்கிறார் ந.பெ. அவர்கள். நாற்பது கட்டுரைகளையும் ஒரே மூச்சில் வாசித்து மகிழ்ச்சி அடைய வைக்கும் உயிர்ப்பு மிக்க எழுத்து…
– கமலாலயன்
Reviews
There are no reviews yet.