Description
நண்பர் நிகரன் வளர்ந்து வரும் திரைப்பாடல் ஆசிரியர், மென்மையான மொழியழகு அவரது பலம். கதாபாத்திரங்களின் குரலை அழகியல் சிறகு கொண்டு அவர் உருவாக்கும் பாட்டுச் சொற்கள் அண்மையில் அதிகமாகப் பறந்து கொண்டுள்ளன. நல்ல எதிர்காலம் நண்பர் நிகரனுக்கு உண்டு என்பதற்கு உறுதி மொழிதான் இந்தக் கவிதைத் தொகுதி.
பிருந்தா சாரதி
திரைப்பட இயக்குநர்
தன் கவிதைகளின் வழியே அகக்கதவைத் திறந்து தன் மன உணர்வுகளை சிறப்புற கவிதைகளாய் வெளிப்படுத்தியிருக்கும் நிகரனை இசையும் பாடலும் கவிதையுமாய் தழுவிக்கொண்டு பாராட்டி மகிழ்கிறேன். என்னைப் போலவே அவனையும் அவன் படைப்பின் உயரத்தையும் இவ்வுலகமும், இலக்கிய, திரைப்பட உலகமும் கொண்டாடும் என்பதை நான் வானளவு நம்புகிறேன்.
‘மனசெல்லாம்’ சந்தோஷ்
திரைப்பட இயக்குநர்
Reviews
There are no reviews yet.