Description
மதிபாலா அவர்களின் கவிதைகள் வாசிப்புக்கு எளிமையாகவும் அதே
நேரத்தில் மொழியின் அடர்த்தியையும் கொண்டு வந்திருக்கிறது.
மனிதனின் பெருந்துயரம் கவிதையிலிருந்து விடுபட முடியாத வாழ்வை
எதிர்கொள்வது தான். வாழ்வின் எல்லைகளை வரையறுக்காமல் பறந்து செல்கிற பறவைகளைப் போல இயல்பு கொண்டிருக்கும் கவிதைகள் மொழியின் மீது கொண்ட நம்பிக்கையை கலையாக மாற்றியிருக்கும் வித்தைகள் மதிபாலா அவர்களின் பலம். இதில் வாசிப்பைவைகள் அனைத்தும் பேசப்படப்போகும் கவிதைகள்,
– வலங்கைமான் நூர்தீன்
கவிதை மொழியை, கவிதைக்கான கருக்களின் வீரியம் குறையாத கவிதைகள்தான் எனக்கு அதிகம் பிடிக்கும். காத்திரமான கருக்களுடன் அனைவருக்கும் புரியும் படியான கவிதை மொழியில் உள்ள வகையில் நான் வாசித்த தொகுப்புகளில் மிக முக்கியமான இடத்தை இந்த தொகுப்பு பெற்றுக்கொண்டுவிட்டது. அதுவும் 2, 3 வரிகளுக்குள்ளாகவே பெரும் பொருள்
தரும் கவிதைகளையும் போகிற போக்கில் அனாயசமாக இந்த தொகுப்பில் தூவிவிட்டுள்ளார். தத்துவார்த்தமான கவிதைகள், காதலோ, காமமோ அவ் உறவின் ஆழத்தை எல்லை வரை சென்று உணர்த்துவதான கவிதைகள், தனித்திருப்பவர்களின் ஏக்கத்தை சொல்கிற கவிதைகளில் கவிஞர் மதிபாலா தனித்துவமிக்கவர். அவரின் எழுத்துகளில் அது ஆழமாகவும் அதே நேரம் அழகாகவும் இருக்கும். இத்தொகுப்பிலும் அவை தொடர்கின்றன.
அதோடு நான் மிக விரும்பி ரசிக்கும் எதார்த்தக் கவிதைகளையும் தொகுப்பில் சேர்த்திருப்பது வாசகனுக்கு எக்ஸ்ட்ரா போனஸ். ‘அப்பாவின் காதலி’, ‘புகையினூடே ஒரு குரல்’ போன்ற கவிதைகள் எதார்த்த பாணியில் எழுதப்பட்ட, இரண்டு நொடிகளேனும் நம்மை மௌனப்படுத்துகிற கவிதைகள்.
– கு.விநாயகமூர்த்தி
Reviews
There are no reviews yet.