Description
நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சுகமான, சுமையான, சோகமான அனுபவங்களை பெற்று வருகிறோம். இக்கதையின் நாயகி “கருத்த” கண்ணம்மாவின் பலவிதமான பரிமாணங்களைப் படிக்கும் போது மனதின் சுவரெங்கும் பிரமிப்பே சுரக்கின்றது. படிப்பில் சிறந்த கண்ணம்மா,பிறருக்கு உதவும் கண்ணம்மா,பாரதியின் ரசிகை கண்ணம்மா, தாய்க்கும் கல்வியறிவு புகட்டும் கண்ணம்மா, மரக்கன்று கொடுக்கும் இயற்கை ஆர்வலர் கண்ணம்மா, தவறான சேகருடன் மோதும் பெண் புலி கண்ணம்மா, அதே சேகரை மன்னித்து “அண்ணா” என்று விளிக்கும் பெண் ஞானி கண்ணம்மா, பாலாஜியுடன் காதல் புரியும் கண்ணம்மா, எதிர்மறை காணாத கண்ணம்மா, பெண்மையைப் போற்றும் கண்ணம்மா….
ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம், என்று அத்துவான வாழ்க்கை வாழ்வதை விட, நம்மோடு வாழும் குடும்பத்தினர், உறவுகள், நட்புக்கள் என எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தி வாழ்வதே “அஸ்திவார வாழ்க்கை”, என்று தன் “பாரதியின் கண்ணம்மா” கதை மூலம் அறை கூவல் விடுத்துள்ள கவிமுகில் சுரேஷ் இந்தச் சமுதாயத்தைச் செதுக்கப் போகும் இளம் சிற்பி. இவரின் எழுதுகோல் வயிறு இன்னும் பல புத்தக ஜீவன்களைப் பிரசவித்து புத்துலகைப் படைக்க வாழ்த்துகிறேன்.
எழுத்துச்சிற்பி. முகில் தினகரன்
Reviews
There are no reviews yet.