ஹைக்கூ பூங்கா
₹120.00
அது இது என்று எதையும் விட்டு விடாமல் சகலத்தையும் சரம் தொடுத்து ஹைக்கூ கவிதையில் மாலையாக்கி உள்ளார் கவிஞர் இரா.மதிராஜ்
ஹைக்கூ பூங்கா நூலில் சுறுக்க எழுத்துக்கள் அனைத்தும் நறுக்கென தைக்கிறது. முதல் கவிதை தொகுப்பு என்கிற சுவடே தெரியவில்லை. அவ்வளவும் பண்பட்ட எழுத்துக்கள்.
காலென்டர், லாட்டரி, முறுக்கு வியாபாரி, காவிரி, வேலையின்மை என கவிஞர் தொடாத பிரச்சனையே இல்லை. எப்படி முடிந்தது என்கிற வியப்பு மிஞ்சும்.
“ஒன்றுபட்டும் வாழ்வில்லை
பிரிந்த மகன்கள் தூக்கி செல்லும்
தகப்பனின் சடலம் ” மனதை பிழிகிறது. இன்னும் எக்கச்சக்க சாட்டையடி.
வாசிப்பற்ற இப்பேற்பட்ட காலத்தில் சகோதரர் மதிராஜின், அரை நொடி ஹைக்கூ அத்தனையும் மெனக்கெடல் இல்லாமல் வாசிக்க முடிகிறது. நேசிக்கவும் உகந்தது. எல்லோரும் வாங்கி படியுங்கள். புதிய அனுபம் உறுதி .
நன்றி
– மாசானபாரதி (பாடலாசிரியர் )
தூத்துக்குடி
Reviews
There are no reviews yet.