Description
நம்பிக்கை என்பது காற்றில் உதிர்ந்துவிடும் ..
ஈசலின் இறகல்ல.. அது
மேலே மேலே உயர வைக்கும் ராஜாளியின் சிறகு…
முடங்கி கிடக்கும் பறவைக்கு
பசி வந்து தான் பந்தி வைக்கும்.
கனவுகளின் கருவறையாய் இருப்பது நம்பிக்கை… மாற்றங்களின் நுழைவாயிலாய் இருப்பது நம்பிக்கை… புதுமைகளின் வரவேற்பாய் இருப்பது நம்பிக்கை….
வெற்றியின் விதையாய் இருப்பது நம்பிக்கை….
வாழ்வில் வெல்ல போராடு…. நம்பிக்கை நதியில் நீராடு…
விடாமுயற்சி உனக்குள் எப்போதும் இருக்கட்டும்… பூக்களில் இருக்கிறது
நறுமண வாசம் .
உனக்குள் இருக்கட்டும்
நம்பிக்கை வாசம்.
விளக்கைஏற்றிவிட்டால்
வெளிச்சம் கிட்டும்…திறமைகளை
தூண்டிவிட்டால். அது சாதனைகளை எட்டும்
Reviews
There are no reviews yet.