Description
பயணம் தரும் வாழ்வியல் அனுபவம் என்பது அளப்பரியது. அவை காட்டும் மனிதர்களும், அவர்களின் கதைகளும், அந்த நிலப்பரப்பும், அதில் வாழும் பட்சியும், விலங்கும் தருகின்ற கற்பிதங்களும் வாழ்தலை செழுமையாக்குகிறது, சிந்தனையை விசாலமாக்குகிறது. என் வாழ்க்கை புத்தகத்தை எழுதுவதையோ அல்லது எதிர்கால பக்கங்களில் எதை நிரப்பி வைக்கலாம் என்பதை பற்றி சிந்தை செய்வதையோ, தேவையற்ற ஒன்றாக உணர வைத்தது பயணங்கள் தான்.
வாழ்க்கை கொடுக்கும் வினாத்தாளை என்னால் இயன்ற வரையில் செவ்வனே விடைக்கொடுக்க ஆரம்பித்தேன், வாழ்க்கைக்கும் என்னை மிகவும் பிடித்துவிட்டது போலும் அது என்னுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தது. எனக்கான கேள்விகளை சற்றே கடினமாக மாற்றியது.
அக்கேள்விகளுக்கான பதிலை தேடுவதில் இருந்த ஆனந்தம், மகிழ்ச்சி, ஆச்சர்யம் என அனைத்தும் என் வாழ்க்கையின் பின் நாட்களில் விடைத்தேடுவதை ஒரு சுவாரசியமான கலையாக மாற்றியது.
அப்படி எனக்கு வாழ்க்கை அளித்த ஒரு செல்ல பரிசுதான் “கொல்கத்தா”
Reviews
There are no reviews yet.