Description
காலந்தோறும் கவிதைகள் தன்னை
யார் மூலமாவது அறிமுகப்படுத்திக் கொள்கின்றன. தன்னுடைய இருப்பையும் சிறப்பையும் சொல்லிக்கொள்ள விரும்பும் அவை,
அதன் வழியே சமூகத்தின்
அகத்தையும் புறத்தையும் திறக்கின்றன.
தற்போது
கவிதையெல்லாம் காதல் வாசம்
தொகுப்பின் வாயிலாக அத்தகைய செயலையே செய்திருக்கின்றன. ம.தயாநிதியின் கவிதைகள் காதலை மையமிட்டு நகர்கின்றன.
கவிதைகள் முழுக்கவும் காதல் நிரம்பி வழிகிறது. சின்னச்சின்ன சம்பவங்கள், அனுபவங்கள், உரையாடல்கள் என விரியும் இத்தொகுப்பை வாசிப்பதே தனித்த ருசியைத் தந்தது. ஒருவர் எப்படி இவ்வளவு காதலிக்கவும் கவிதை செய்யவும் முடிகிறதோ?
சொல்லத் தொடங்கினால் வாழ்த்து முழுக்கவே மேற்கொள்களாக அமைந்துவிடும் அபாயமிருக்கிறது. ஆபத்தான வளைவு பார்த்து செல்லவும் என மலைப்பாதைகளில் எழுதி வைத்திருப்பார்கள். அதைப்போலத்தான் இந்த தொகுப்பிலுள்ள பல கவிதைகள் எனக்குப் படுகின்றன.
ஒருமுறைதான் சிரித்தாய்,
இதோ தொன்னூறு பக்கங்களிலும் ஒட்டிக்கொண்டது கவிதை என்று எழுதுகிற தயாநிதி, மனசு நிரம்ப காதலைச் சுமப்பவராகத் தெரிகிறார்.
ஒரு கவிதையில் இருந்து
இன்னொரு கவிதைக்கு நகர்வதற்குள் நமக்குமே காதலின் வண்ணங்கள் ஒட்டிக்கொள்கின்றன.
கவிஞர் யுகபாரதி
Reviews
There are no reviews yet.