Description
முதல் காதல் தோல்வியினை வலி என்று நினைப்பவனுக்கு வாழ்க்கை முடிந்துவிடும் என்று சொல்லும்போதும் என் சக தோழமைக் கவிஞனாக என்னோடு அருகமர்ந்து கொள்கிறார் கவிஞர் கஷ்மீர் ஜோசப். ‘ மை எழுதிய கண்கள் ‘ நம் மனசில் மையமிட்டு அமர்ந்துகொண்ட காதல் கவிதைகளின் தேர்ந்த தொகுப்பு.
மு.முருகேஷ்
குறையென்று சொல்ல வேண்டுமானால் கவிதைகள் எப்போதோ எங்கோ நாம் படித்த ஒரு உணர்வை தோற்றுவிக்கும். ஏனெனில் கவிஞர் காதலை விட்டு அங்கு இங்கு எங்கும் நகரவில்லை.
பாப்பாக்குடி இரா.செல்வமணி
ஒரு கவிஞனின் எழுத்துகள் நம்முள் வாசிப்பையும் தாண்டி பல்வேறு கிளைக்கதைகளையும், தோற்றங்களையும் உருவாக்க வேண்டும். அப்படித்தான் கவிஞர் கஷ்மீர் ஜோசப் அவர்களின் கவிதைகள் வரிகளையும் தாண்டி யோசிக்க வைக்கிறது.
லதாசரவணன்
Reviews
There are no reviews yet.