Description
வாழ்வியலோடு எழுதுறீங்கம்மா… உங்க கட்டுரைகளை தொடர்ந்து படிக்கிறேன் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஐயாவின் வார்த்தைகள் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது.
இந்த நான்கு வருட காலத்தில் எழுத்துகள் மூலம் யாரோ ஒருவரின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வர முடிந்தது என்பதை தவிர வேறென்ன மன உவகை வேண்டும்.. இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு ஆறுதலோ, பகிர்வோ தேவைப்படுகிறது. அதனைத் தருவதற்கான ஒரு சிறு துரும்பாக என் எழுத்துகளும் இருக்கிறது என்பது சந்தோசமாக இருக்கிறது. எழுத்துக்களை மையில் இருந்து எழுதாமல் இதயத்தில் இருந்து எழுதும் போது மட்டுமே அந்த எழுத்துகள் உயிரோட்டமாக இருக்கும் என்பதையும் உணர்ந்திருக்கிறேன். அப்படியான எழுத்துக்கள் கட்டுரைகளாகி, அந்த கட்டுரைகளைப் புத்தக வடிவில் வருவது வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எண்ணியிருந்தேன். எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது போல அதை புத்தக வடிவில் தங்கள் கரங்களில் செங்கனி பதிப்பகம் தந்திருக்கிறது.
– ம. ஜெயமேரி
Reviews
There are no reviews yet.