Description
மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்தது மருத்துவம், அதை சிக்கலில்லாமல் செய்துகொள்ள உரிய அறிவு ஒவ்வொருவரும் பெற வேண்டியது அவசியம். தவறான செய்திகளை புறந்தள்ளி சரியான முறையில் சிகிச்சைகளைப் பெற வழிகாட்ட வேண்டியது
ஒவ்வொரு மருத்துவரின் அவசியமான கடமையாகும். அந்தக் கடமையை சிறப்பாக செய்திருக்கிறார் மருத்துவர் நீலகண்டன்.
மருத்துவ நூல்களைப் படிப்பது மிகுந்த அயர்வை உண்டாக்கும். ஆனால் இன்னூல் எளிய நடையில் எளிய மக்களின் மொழிநடையோடு எழுதப்பட்டிருக்கிறது. தலைப்புக்குள் சென்றவுடன் முழுவதுமாக படித்து விட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. அதனால் எளிய குடும்பத்தில் பிறந்து, நன்கு படித்து, மருத்துவராகி, எளிய மக்களோடு தனது மருத்துவ பணியை தொடரும் ஒரு மருத்துவரால் தான் மக்களுக்கான படைப்பை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
– மெய்சுடர்
Reviews
There are no reviews yet.