Description
காதலின் முழுமையை அபூர்வ கணங்களால் கண்டெடுக்கும் கண்களும் இதயமும் வாய்க்கப்பெற்று தமிழ்க் கவிதை உலகில் இதுவரை யாரும் வந்தடையாத கவிதை மனத்தின் புதிய திறப்பில் எளிமையும் ஆழமும் மிகுந்த நவீன அம்சத்தில் ஒளிரும் புத்தம்புது சொற்கள் நித்தியாவுடையவை. மெனக்கெட்டு புதுமையைத் தேடும் எண்ணற்றவர்களின் நெடும் பயணத்தில் தென்படாத புத்துணர்வு, அகப்படாத அருஞ்சொற்கள், பழக வாய்க்காத பண் ஒழுங்கு, ஏற்பாடற்ற மொழி நேர்மை, எவரும் பின் ஒதுக்க வழியற்ற அசல் தன்மை, எப்படி இது சாத்தியம் என வியக்கும் ஒளித்தருணம் மட்டுமன்றி பூரண இருட் தருணமும் என நிறைந்த பிரவாகம் இக்கவிதைகள். உயிர்க் கூட்டின் உள் நடனத்திற்கு யாரோ இசை அமைத்து அதற்கென எழுதப்பட்ட வரிகள் இவை என்றும் புளகாங்கிதம் அடையலாம்.) மடைதிறந்த வெள்ளம் போல மனத்திறப்பின் வெள்ளமாக பாய்கின்றன இக்கவிதைகள். – கவிஞர் குகை மா. புகழேந்தி
Reviews
There are no reviews yet.