நீயே மாற்றம்

60.00

Description

சமுதாயம் சார்ந்த காயங்களும் அவை தரும் வலிகளும் மிகவும் வேதனைக்குரியது. என்னைச் சுற்றிய சமுதாயம் ஏற்படுத்திய வலி எத்தனையோ இரவுகள் என்னை தூங்கவிடாமல் செய்தது. ஜாதிவெறி, இனவெறி, பணவெறி, சொத்துவெறி, காமவெறி, பதவிவெறி, ஆணாதிக்க ஆணவவெறி ஆகியவற்றில் ஊரிப்போன நம் சமுதாயத்தை மாற்றுவது மிகவும் கடினம் என்று தெரிந்து கொண்டேன். பின் எவ்வாறு நம் சமுதாயத்தை இதிலிருந்து மீட்டெடுப்பது என்று சிந்தித்தபோது, அது நம் அடுத்த தலைமுறையினரால்தான் முடியும் முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.

நீ வாழும் சமுதாயம் இப்படிதான் உள்ளது இவற்றை நீ மாற்ற வேண்டும் என்றால் நீ முதலில் மாற வேண்டும் என்று நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை அவர்கள் முன் நிறுத்தி அவைகள் கொடுக்கும் தாக்கங்களை அவர்களே உணரச் செய்வோம் என்ற எதார்த்த சிந்தனையோடு எனக்குள் ஏற்பட்ட காயங்களையும், வடுக்களையும் உருவாக்கிய சம்பவங்களைத் தொகுத்து “நீயே மாற்றம்” என்ற தலைப்பில் எத்தனையோ தடைகளைத்தாண்டி என் முதல் புத்தகத்தை தந்திருக்கிறேன்.

சில மனங்களாவது மாறும் என்று நம்பிக்கையுடன்.

– அழகிரி

Reviews

There are no reviews yet.

Be the first to review “நீயே மாற்றம்”

Your email address will not be published. Required fields are marked *