Description
மனித வாழ்வியல் முறையிலிருந்து தன்னை முற்றிலுமாக விலக்கி கொள்ளாத இயற்கை, ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து இசைந்தும் இணைந்தும் செயல்பட விரும்புவதை சாமி கிரிஷ் கவிதைகளில் பார்க்க முடிகிறது. எஞ்சியதை கொண்டு உருவாக்கிய தன்னுடைய குடிலை இயற்கைக்கு எதிரானவர்களிடம் இருந்து தற்காத்து கொள்ள நினைக்கிறார். வேதனையாக இருந்தாலும் நிறை பால்மடியின் கோள வடிவத்தை தேநீர் நிரப்பப்பட்ட நெகிழிப் பையில் காண்கிறார்.
தொலைந்த ஒற்றை கால் செருப்பு விட்டுச் சென்ற பாதத்தை தேடுவது போல இயற்கையும் தன்னை தேடுபவர்களுக்கும் காப்பவர்களுக்கும் கரங்களை என்றுமே தருகிறது. கருணையின் ஒரு துளியை கொண்டு பெரும் வனத்தை உருவாக்கி விடுகிறார். அத்துளியை திருப்பித் தராத மனநிலையில் இயற்கையை பாதுகாக்கும் வாஞ்சையை உணர்த்துகிறது. முள்வலியை அரை நூற்றாண்டு பின் உணரும் தாய்மையை உடனே கண்டு உணர்பவர்களுக்கு இயற்கையும் பெருமழையை தரவிருக்கிறது. அதனின் சாத்தியப்பாடுகள் தொகுப்பில் தெரிகின்றது.
– கவிஞர். வேல்கண்ணன்
Reviews
There are no reviews yet.