Description
திருவள்ளுார் மாவட்டத்தினைச் சேர்ந்த திருவாலங்காடு என்னும் ஊரில் உள்ள இரண்டாம் இராஜாதிராஜ சோழரின் 12ம் ஆட்சியாண்டு கல்வெட்டு, சோழனுக்கும், பாண்டியனுக்கும் இடையே அப்போது நடந்த பல நிகழ்வுகளை தன்னுள் அடக்கியுள்ளது. கிபி 915ல், முதலாம் பராந்தக சோழருடன் ஏற்பட்ட போரில், தோல்வியடைந்த பாண்டிய மன்னரான இராஜசிம்மப் பாண்டியன், தனது அரசுரிமை சின்னங்களான மணிமுடியினையும், இந்திர ஆரத்தினையும், ஈழத்தரசனிடம் கொடுத்து மறைத்து வைக்கிறான். அந்த மணிமுடி மற்றும் இந்திர ஆரம் கடந்து வந்த பயணத்தினைத்தான், எப்படி அவை மீண்டும் பாண்டியனிடத்தில் திரும்பியிருக்கும் என்பதைத்தான், கல்வெட்டு காட்டும் நிகழ்வுகளின் அடிப்படையில், அவை காட்டும் மாந்தர்களைக் கொண்டே, கற்பனைச் சுவையினை சிறிதளவு கலந்து, இந்த புதினமாகப் படைத்து உங்கள் முன் வைத்துள்ளேன்.
Reviews
There are no reviews yet.