Description
மனிதன் சிந்திப்பதை நிறுத்திக்கொள்வதையே மரணம் என்கிறோம். இந்த மரணமெனும் முற்றுப்புள்ளியிலிருந்தே தான் இந்த ‘உயிர் எங்கே செல்கிறது?’ எனும் சிந்தனைகளின் தொகுப்பு வேர்க்கொண்டு எழுந்து நிற்கிறது. கவிஞராக, நாவலாசிரியராக இருந்த கெளரிலிங்கம் ‘உயிர் எங்கே செல்கிறது?’ எனும் இந்த நூலின் வழியே தத்துவவாதியாகவும் அறியப்பட, விவாதிக்கப்படப் போகிறார் என்பதில் பெருமகிழ்ச்சியே.
முதலில் ஆற்றொழுக்கான மொழிநடைக்காகவே ஒரு பாராட்டைச் சொல்ல வேண்டும். தத்துவ நூல்கள் என்றாலே இறுக்கமான மொழிநடையும், சற்றே குழப்பமான கேள்விகளும் உடையதாக இருக்கும் எனும் பொதுவிதியை இந்த நூல் தகர்த்தெறிந்திருக்கிறது.
இந்நூலின் தத்துவ விசாரணைக்குள் துணிந்து செல்லலாம். மனிதன் ஆறறிவு படைத்தவனா?, உயிர் ஏன் பிரிகிறது?, கடவுள் யார்? என்கிற பெரிய பெரிய கேள்விகளை எழுப்பி, எளிய விளக்கங்கள் மூலமாகத் தெளிவுபடுத்த முனைந்துள்ளார் எழுத்தாளர் கெளரிலிங்கம்.
இந்த நூலை வாசியுங்கள்; விவாதியுங்கள்; சிந்தனைக வேர்கள் இன்னும் இன்னுமாக கிளர்ந்தெழட்டும்.
எனது அன்பினிய நண்பர், எழுத்தாளர் கெளரிலிங்கத்திற்கு எனது பேரன்பின் வாழ்த்துகள்.
– மு.முருகேஷ்
இந்நூல் அறிவியல், தத்துவம், ஆன்மிகம் ஆகிய மூன்றும் கலந்து நம் சிந்தனையைத் தூண்டுவனாக உள்ளன. உயிர் என்பது மனம், வாயு, வெப்பம், நிலம், மற்றும் நீரின் கலவை இதில் ஒன்று இல்லையெனினும் உயிர் தோன்றது. இதில் ஒன்று குறைந்தாலும் உயிர் தங்காது. “அது பிரிந்தே தீரும்” என்னும் செய்திகளுடன் சிந்தனைக்கு விருந்தாகவும், அறியாமைக்கு மருந்தாகவும் அமைகிறது. ஆக மொத்தத்தில் உயிர் எங்கே செல்கிறது? என்னும் இவருடைய மூன்றாவது படைப்பு, தங்கக் கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரக்கல் எனலாம். ஐயா கெளரிலிங்கம் அவர்கள் மேன்மேலும் சிறந்த படைப்புகளை தர மனமார்ந்து வாழ்த்துகிறேன்.
– தமிழ்ப்பிரியன்
Reviews
There are no reviews yet.