Description
நிஷா மன்சூர் அடிப்படையில் ஒரு கவிஞர். விரிவான வாசிப்புப் பழக்கம் கொண்ட படிப்பாளி. சூஃபித்துவத்தில் நல்ல ஆழமான ஈடுபாடு கொண்டவர். சூஃபித்துவ கோட்பாடுகளை அறிவார்ந்த தளத்தில் வியாக்யானம் செய்பவர். நல்ல ஆற்றல் மிக்க பேச்சாளரும் கூட. அவருடைய இலங்கை பயணத்தில் கூடவே சில நாட்களை கழிக்க நேர்ந்தது வாழ்வின் அற்புதமான தருணங்களில் ஒன்று என்பேன். சிலரினது ஆளுமை எம்மைக் கவரும் ஆனால் அறிவாற்றல் கவராது. இன்னும் சிலரது அறிவாற்றல் எம்மைக் கவரும் ஆனால் ஆளுமை எம்மைக் கவராது. ஆனால் வெகு சிலரினதே அறிவாற்றலும் ஆளுமையும் எம்மைக் கவரும். நிஷா மன்சூர் அந்த வெகு அரிதான சிலரில் ஒருவர்.
– லஃபீஸ் ஷஹீத்
Reviews
There are no reviews yet.